செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Published On 2018-09-24 10:33 GMT   |   Update On 2018-09-24 13:26 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #JKLandslide
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு  மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், காலி பட்டோலி கிராமத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு மண் வீடு முழுவதும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது.


இதையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள், அங்கு விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், வீட்டில் இருந்த  கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என 5 பேரையும்  சடலமாகவே மீட்க முடிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #JKLandslide
Tags:    

Similar News