செய்திகள்

இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமனம் செய்தது வாட்ஸ்அப்

Published On 2018-09-23 23:55 GMT   |   Update On 2018-09-24 02:06 GMT
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமனம் செய்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #WhatsApp
புதுடெல்லி :

சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

இதனால், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமைச் செயல்அதிகாரி கிறிஸ் டேனியலுடன் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது கோரிக்கை வைத்தார். 

மேலும், இந்தியாவுக்கென மையம் அமைத்து வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படவும், குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் அவர் வலியுறுத்தினார். 

இந்நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று கோமல் லகிரி என்பரை இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்து வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. #WhatsApp
Tags:    

Similar News