செய்திகள்

ரபேல் போர் விமான பேரத்தில் பொய்: நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2018-09-20 23:31 GMT   |   Update On 2018-09-20 23:31 GMT
ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #Rafale #DefenceMinister #NirmalaSitharaman #RahulGandhi
புதுடெல்லி:

‘ரபேல்’ போர் விமான கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அதை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்தும் வருகிறார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ‘ரபேல்’ போர் விமானத்தை தயாரிக்கிற தகுதித்திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.



ஆனால் அதை அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டி.எஸ். ராஜூ மறுத்தார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரபேல் போர் விமானத்தை இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்க முடியும். அதற்கான தகுதித்திறன், எங்களுக்கு இருந்தது” என்று கூறினார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “ஊழலை பாதுகாக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ரபேல் மந்திரி (நிர்மலா சீதாராமன்) பொய் சொல்லி இப்போது அகப்பட்டுக்கொண்டு விட்டார். ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற திறன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கிடையாது என அவர் கூறியதை அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜூ மறுத்துள்ளார். எனவே அவரது நிலை ஏற்கத்தக்கது அல்ல. அவர் பதவி விலக வேண்டும்” என்று கூறி உள்ளார்.  #Rafale #DefenceMinister #NirmalaSitharaman #RahulGandhi
Tags:    

Similar News