செய்திகள்

மராட்டியத்தில் மாணவியை தவறான பாதைக்கு அழைத்த ஆசிரியர்கள் 2 பேர் கைது

Published On 2018-09-19 18:49 GMT   |   Update On 2018-09-19 18:49 GMT
மராட்டியத்தில் மாணவியை தவறான பாதைக்கு அழைத்த ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். #Maharashtra #TeachersArrest #HSCExam
மும்பை:

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் அட்காவ் பகுதியில் ஒரு தனியார் ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர்கள் 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய செய்வதற்காக தங்களிடம் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறி தவறான பாதைக்கு அழைத்தனர்.



இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட மாணவி கல்லூரி வகுப்பறையில் இருந்தார். அப்போது தொடர் சீண்டல்களில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் ஒருவர், மாணவியின் கையைப்பிடித்து, உடலில் தொட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனையடுத்து மாணவி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், கல்லூரி ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
Tags:    

Similar News