செய்திகள்

‘இனி அது கிடையாது’ அதிக உடல் எடை கொண்ட வீரர்களுக்கு கடலோர காவல் படை கொடுத்த ஷாக்

Published On 2018-09-09 04:34 GMT   |   Update On 2018-09-09 04:34 GMT
அதிக உடல் எடை உள்ள வீரர்களுக்கு ராணுவ கேன்டீனில் மலிவு விலையில் மதுபானம் வழங்கப்பட மாட்டது என வடமேற்கு கடலோர காவல் படையின் கம்மாண்டர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். #CoastGuard
அகமதாபாத்:

தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள படைகள், மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை ராணுவ படைகளில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகளுக்கு தனியாக கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன.

சந்தை விலையை விட அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் இந்த கேன்டீனில் விற்கப்படுகின்றது. வீரர்களுக்காக மலிவு விலையில் மதுபானமும் விற்கப்படுகின்றது. இந்நிலையில், வடமேற்கு கடலோர காவல்படை கமாண்டர் ராகேஷ் பால் விடுத்துள்ள சுற்றறிக்கையில், “உடல் எடையை கட்டுக்குள் வைக்காத வீரர்களுக்கு மலிவு விலையில் மதுபானங்கள் தரப்படாது. மருத்துவ பரிசோதனைகள் செய்து உடல் எடையை குறைக்காமல் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்” என கூறப்பட்டுள்ளது.

வடமேற்கு கடலோர காவல் படை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடல் எல்லையை கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News