search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலோர காவல் படை"

    • அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.
    • கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிக அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்த போதிலும் கடத்தல்காரர்கள் ஊடுருவி விடுகிறார்கள்.

    இந்நிலையில் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியான குற வன்தோப்பு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உஷாரான போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால் அதற்குள் கடத் தல் கும்பல் நாட்டுப்படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக கியூ பிரிவு போலீசார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.

    இதைப்பார்த்த படகில் இருந்தவர்கள் ஒரு சில மூட்டைகளுடன் கடலில் குதித்து தப்பினர். பின்னர் அந்த படகை பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படையினர் சோதனையிட்டனர். அப்போது அதில் 18 மூட்டைகளில் பல லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    படகுடன் மாத்திரை மூட்டைகளை கரைக்கு கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாத்திரைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட நாட்டுப்படகு பாம்பனை சேர்ந்த வெனிஸ்டன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது.
    • கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த 24-ந்தேதி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் வேலு உள்பட 9 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது. அதனை சரிபார்க்க முயன்றும் முடியவில்லை. இதனால் மீனவர்கள் 9 பேரும் கரைதிரும்ப முடியாமல் படகில் தத்தளித்தனர்.

    மேலும் காற்றின் திசைக்கு ஏற்ப விசைப்படகு நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தங்களிடம் இருந்த வயர்லெஸ் மூலம் அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மற்ற தமிழக விசைப்படகுகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மீன்வளத்துறை இயக்குனர் பழனிசாமி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து 240 கடல் மைல் தூரத்தில் பழுதான படகில் மீனவர்கள் தத்தளிப்பதை அந்தபகுதி வழியாக வந்த சரக்கு கப்பலில் இருந்த ஊழியர்கள் கண்டு பிடித்தனர். அவர்கள் மீனவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவை கொடுத்து உதவினர். இதுபற்றி சரக்கு கப்பல் அதிகாரிகள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலோரகாவல் படையினர் ரோந்து படகில் விரைந்து சென்று பழுதான விசைப்படகில் இருந்த காசிமேடு மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் விசைப்படகை தங்களது படகில் கயிறு மூலம்கட்டி இழுத்தபடி நேற்று இரவு அருகில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு காசிமேடு மீனவர்கள் 9 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசைப்படகை சரிசெய்து மீனவர்கள் விரைவில் காசிமேடு திரும்ப உள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

    அதிக உடல் எடை உள்ள வீரர்களுக்கு ராணுவ கேன்டீனில் மலிவு விலையில் மதுபானம் வழங்கப்பட மாட்டது என வடமேற்கு கடலோர காவல் படையின் கம்மாண்டர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். #CoastGuard
    அகமதாபாத்:

    தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள படைகள், மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை ராணுவ படைகளில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகளுக்கு தனியாக கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன.

    சந்தை விலையை விட அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் இந்த கேன்டீனில் விற்கப்படுகின்றது. வீரர்களுக்காக மலிவு விலையில் மதுபானமும் விற்கப்படுகின்றது. இந்நிலையில், வடமேற்கு கடலோர காவல்படை கமாண்டர் ராகேஷ் பால் விடுத்துள்ள சுற்றறிக்கையில், “உடல் எடையை கட்டுக்குள் வைக்காத வீரர்களுக்கு மலிவு விலையில் மதுபானங்கள் தரப்படாது. மருத்துவ பரிசோதனைகள் செய்து உடல் எடையை குறைக்காமல் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்” என கூறப்பட்டுள்ளது.

    வடமேற்கு கடலோர காவல் படை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடல் எல்லையை கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×