செய்திகள்

தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும், தேசிய கட்சிகளுக்கு இடமளிக்க கூடாது - சந்திரசேகர ராவ்

Published On 2018-09-02 15:09 GMT   |   Update On 2018-09-02 15:09 GMT
தமிழ் நாட்டில் மாநில கட்சிகளின் தலைவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பது போல் தெலங்கானாவை நம்மை நாமே ஆள வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். #TelanganaAssembly #ChandrasekharRao
ஐதராபாத் :

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தொடக்க விழா மற்றும் தனி தெலுங்கானா மாநிலம் உதயமான விழா ஆகிய இருபெரும் விழாவை சிறப்பிக்கும் விதமாக ரங்காரெட்டி மாவட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

மாநிலம் மற்றும் தேசிய அளவில் தனது செல்வாக்கை காட்டும் விதமாக சந்திரசேகர ராவ் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு பிறகு 2,000 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் உரையாற்றினார். அப்போது, அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

நான் தெலுங்கானா சட்டப்பேரவையை கலைக்கப்போவதாக சில செய்தி சேனல்கள் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்கள் எனக்கு வழங்கியுள்ளனர். எனவே, எந்த முடிவை எடுத்தாலும் முன்கூட்டியே அவர்களுக்கு நான் தெரிவிப்பேன்.


 
’பாகிரதா’ திட்டப்படி அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன். அவ்வாறு செய்யவில்லை எனில் அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இப்படி தைரியமாக வேறு எந்த மாநில முதல்வரும் வாக்குறுதி அளிக்க மாட்டார்கள்.

தமிழ் நாட்டில் தொடர்ச்சியாக மாநில கட்சிகளின் தலைவர்களே ஆட்சியில் இருப்பது போல் தெலங்கானாவையும் நாமே ஆட்சி வேண்டும், இங்கு தேசிய கட்சிகளுக்கு இடமளித்து டெல்லியில் உள்ளவர்களுக்கு அதிகாரத்தை விட்டுகொடுத்துவிட கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #TelanganaAssembly #ChandrasekharRao 
Tags:    

Similar News