செய்திகள்

கர்நாடக மந்திரி மகேஷ், நிர்மலா சீதாராமன் இடையே வாக்குவாதம் - பரஸ்பரம் மன்னித்துக்கொள்வோம் குமாரசாமி கருத்து

Published On 2018-08-26 19:50 GMT   |   Update On 2018-08-26 19:50 GMT
கர்நாடக மந்திரி மகேஷ், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இடையேயான வாக்குவாதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதல்வர் குமாரசாமி, இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #SARAMahesh #Kumaraswamy
பெங்களூரு :

குடகு மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட கடந்த 23–ந் தேதி மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குடகுக்கு வந்தார். அங்கு பத்திரிகையாளர்கள் கூட்டத்தில், குறுக்கிட்டு பேசியதால் குடகு மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ் மீது நிர்மலா சீதாராமன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அவர் பேசிய அந்த உரையாடல் வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மந்திரி சா.ரா.மகேஷ் நடந்து கொண்ட விதம் சரியல்ல என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் முதல்–மந்திரி குமாரசாமி இதுபற்றி கருத்து தெரிவித்து மாநில அரசின் இணையதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தில் பயணம் செய்தபோது நடந்த நிகழ்வால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மத்திய அரசின் முழு உதவியுடன் மாநில அரசு, மத்திய அரசு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கரம் கோர்த்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

குடகு மாவட்ட பொறுப்பு மந்திரி சா.ரா.மகேஷ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருகிறார். மீட்பு பணிகளுக்காக உதவி கோரியபோது, ராணுவ மந்திரி தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். குடகு மாவட்ட மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குடகில் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

அவர் சுற்றுப்பயணம் செய்தபோது, அந்த மாவட்டத்தில் நிலைமை மிக மோசமாக இருந்தபோதும், மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அவருடைய பயண திட்டத்தை திட்டப்படி நடத்தி கொடுத்தது. ஆயினும் ராணுவ மந்திரிக்கு சில சிரமங்கள் ஏற்பட்டுவிட்டன. இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இந்த வி‌ஷயம் குறித்து ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் பேசினேன். #NirmalaSitharaman #SARAMahesh #Kumaraswamy
Tags:    

Similar News