செய்திகள்

பாரதியார் கவிதையை தமிழில் வாசித்து உரையாற்றிய பிரதமர் மோடி

Published On 2018-08-15 06:32 GMT   |   Update On 2018-08-15 06:32 GMT
டெல்லியில் இன்று சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, பாரதியாரின் தேசபக்தி பாடல் வரியை மேற்கோள் காட்டி பேசினார். #IndependenceDayIndia #PMModi
புதுடெல்லி:

இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

அப்போது, மத்திய அரசின் பல்வேறு சாதனைகளையும், இந்தியா உலக அரங்கில் பல துறைகளில் முன்னேறியிருப்பதை பற்றியும் குறிப்பிட்டு பேசினார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி தனது உரையின் போது, மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார். மகாகவி பாரதியின் பாரத சமுதாயம் வாழ்கவே என்ற தேசபக்தி பாடலில் இடம்பெற்றுள்ள ‘எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்' என்ற வரியை பிரதமர் மேற்கோள் காட்டி பேசினார். #IndependenceDayIndia #PMModi
Tags:    

Similar News