செய்திகள்

மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் சுஷ்மா சுவராஜ்

Published On 2018-08-05 18:51 GMT   |   Update On 2018-08-05 18:51 GMT
மத்திய ஆசிய நாடுகளில் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டெல்லி திரும்பினார். #SushmaSwaraj
புதுடெல்லி :

மத்திய ஆசிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  

அப்போது, மத்திய ஆசிய நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் தெரிவித்தார். 

மேலும், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து கலந்துரையாடிய சுஷ்மா, உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக, மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். #SushmaSwaraj
Tags:    

Similar News