செய்திகள்

மகாராஷ்டிரா பேருந்து விபத்து - சுதந்திர தின விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார் கவர்னர்

Published On 2018-08-04 15:06 GMT   |   Update On 2018-08-04 15:38 GMT
மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு நடைபெறவுள்ள சுதந்திர தின விருந்து நிகழ்ச்சியை கவர்னர் வித்யாசாகர் ராவ் ரத்து செய்துள்ளார். #IndependenceDay
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தளிப்பது மரபாகவே இருந்து வருகிறது.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் தபோலியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள்,  சடாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஸ்வர் பகுதிக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றனர். ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் மலைப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த ஆண்டு கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். #IndependenceDay
Tags:    

Similar News