செய்திகள்

மனிதர்களை போலவே மாடுகளும் முக்கியம் - யோகி ஆதித்யநாத்

Published On 2018-07-25 11:15 GMT   |   Update On 2018-07-25 11:15 GMT
உத்திரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மனிதர்களை போலவே பசுக்களும் முக்கியம் என கருத்து தெரிவித்துள்ளார். #moblynching
லக்னோ :

ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பசுக்களை கடத்தியதாக கூறி ஒருவர் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்,  ’ஒவ்வொறு மதமமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நபரும் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது அவர்களுடைய கடமை. எனவே, அனைவருக்கும் நாம் பாதுகாப்பு வழங்க வேண்டும். 

மனிதர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், ஆனால், மனிதர்களை போலவே மாடுகளும் முக்கியம். இயற்கையிலேயே மனிதர்களுக்கும் பசுக்களும் தங்களுக்கே உரிய குணாதியங்களை பெற்றுள்ளன. 

ஆல்வார் விவகாரத்திற்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பற்றி பேசுபவர்கள் 1984-ம் ஆண்டு சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை பற்றி பேசுவார்களா ? ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர்’ என தெரிவித்தார். #moblynching
Tags:    

Similar News