செய்திகள்

பீகார் சிறுமியர் காப்பகத்தில் கற்பழிப்பு, படுகொலைகள் - போலீசார் தீவிர சோதனை

Published On 2018-07-23 11:30 GMT   |   Update On 2018-07-23 11:30 GMT
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகத்தில் நடைபெற்ற கற்பழிப்பு, படுகொலைகள் தொடர்பாக போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #Biharshelterhome
பாட்னா:

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், காப்பகத்தில் உள்ள இரு சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் இன்று வந்த போலீசார் காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட பிணைத்தை கைப்பற்றுவதற்காக தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனைக்கு மறுப்பு தெரிவித்த காப்பகத்தை சேர்ந்த சுமார் பத்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #Biharshelterhome #Biharshelterhomerape #Biharshelterhomekilling
Tags:    

Similar News