செய்திகள்

குழந்தை கடத்தல் வதந்தி - மத்தியப்பிரதேசத்தில் பெண் படுகொலை

Published On 2018-07-22 22:10 GMT   |   Update On 2018-07-22 22:10 GMT
மத்தியப்பிரதேசத்தில் குழந்தை கடத்தல் வதந்தியை உண்மை என நம்பி பொதுமக்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

குழந்தை கடத்தல் பீதி தற்போது நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் தொடங்கி தற்போது மராட்டியம், டெல்லி  என வட மாநிலங்களில் குழந்தை கடத்தல் வதந்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

சில போலியான வீடியோக்களின் உதவியுடன் பரவும் இந்த வதந்தியை பலர் உண்மை என நம்பி, கும்பலாக திரண்டு சந்தேகத்துக்கு இடமான வகையில் காண்பர்வர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

சமீபத்தில், மராட்டிய மாநிலம் துலே பகுதியில் ரெயின்பாடா என்ற இடத்தில் ஒரு கும்பல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களில் இது போன்ற தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பல தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. 

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்த்தில் உள்ள மோர்வா பகுதியில் குழந்தை கடத்தல் நடைபெறுவதாக வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரவியுள்ளது. 

இதைத்தொடர்ந்து, சுமார் 25 வயது மதிக்கத்தக்க அப்பாவி பெண் ஒருவரை குழந்தை கடத்துபவர் என சந்தேகித்து அவர் மீது அப்பகுதி பொதுமக்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த, படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்த்னர். 
Tags:    

Similar News