செய்திகள்

ரொட்டியை தீய்த்து தந்த மனைவிக்கு முத்தலாக்

Published On 2018-07-09 09:46 GMT   |   Update On 2018-07-09 09:46 GMT
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரொட்டியை தீய்த்து தந்ததாக மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. #tripletalaq
லக்னோ :

உத்திரப்பிரதேசம் மாநிலம், மஹோபா மாவட்டத்தில் உள்ள பக்ரேதா எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், ரொட்டியை தீய்த்து தந்ததற்காக முத்தலாக் கூறி தனது கணவர் விவாகரத்து செய்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும், முத்தலாக் கூறியதால் வீட்டை விட்டு வெளியே செல்ல வற்புறுத்தி, சிகரெட்டை கொண்டு உடலில் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் புகார் மனுவின் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இவ்விகாரம் தொடர்பாக அந்நபரின் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முத்தலாக் முறை மூலம் மனைவியரை விவாகரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்த நிலையிலும் இதுபோல் சில்லரை பிரச்சனைகளுக்கு மனைவியை விவாகரத்து செய்யும் பழக்கம் இன்னும் தொரடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும். #tripletalaq
Tags:    

Similar News