செய்திகள்

உ.பி.யில் சோகம் - ஆம்புலன்ஸ் வராததால் பாட்டியை கட்டை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த பேரன்

Published On 2018-06-23 21:24 GMT   |   Update On 2018-06-23 21:24 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் தனது பாட்டியை கட்டை வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு தூக்கி வந்த பேரனின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Ambulance #GrandmainCart
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்டி மாவட்டத்தில் உள்ளது கமல்பூர் கிராமம். இங்கு வசிக்கும் சிறுவன் சோட்டு (12). இவனது பாட்டி அனரா தேவி (85).

அனரா தேவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நிலை மோசமானது. இதையடுத்து, சோட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். ஆம்புலன்சுக்கு போன் செய்தார். ஆனால் ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை

நேரம் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த  சோட்டு, அங்கிருந்த கட்டை வண்டியில் அனரா தேவியை வைத்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

உ.பி.யில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வாடிக்கையாக உள்ளதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:    

Similar News