செய்திகள்

உ.பி.யில் மேளதாளத்தோடு தவளைகளுக்கு கல்யாணம் - மழை வேண்டி பிரார்த்தனை

Published On 2018-06-23 12:47 GMT   |   Update On 2018-06-23 12:47 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவை வேண்டி வாரணாசி நகரில் பிளாஸ்டிக் தவளைகளுக்கு திருமணம் செய்வித்து மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.
லக்னோ:

இந்து புராணங்களின்படி, மழைக்கான வருண பகவான் என்று போற்றப்படும் இந்திரனை மகிழ்வித்தால் அப்பகுதியில் நல்ல மழைப்பொழிவு ஏற்படும் என்பது ஐதீகம் சார்ந்த நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவை வேண்டி வாரணாசி நகரில் “பிளாஸ்டிக்” தவளைகளுக்கு திருமணம் செய்வித்து மக்கள் பிரார்த்தனை நடத்தினர்.

இந்து முறைப்படி திருமணத்திற்கு தேவையான சீர்வரிசைகளோடு மேளதாளத்துடன் ஊர்வலமாக மணப்பந்தலுக்கு சென்று யாகம் செய்தனர். பின்னர் இரு தவளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து திருமணம் செய்து வைத்தனர். #tamilnews
Tags:    

Similar News