செய்திகள்

செல்பி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரியை தாக்கிய மலைப்பாம்பு - வைரலாகும் வீடியோ

Published On 2018-06-18 08:36 GMT   |   Update On 2018-06-18 08:36 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் மலைப்பாம்பை தோளில் போட்டு செல்பி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரியை பாம்பு தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மலைப்பாம்பை பிடித்தனர். அதில் ஒரு அதிகாரி பாம்பை தனது தோளில் எடுத்து போட்டுக்கொண்டு நடந்தார்.

அப்போது அவருடன் செல்பி எடுக்க கிராமத்தினர் முயன்றனர். திடீரென பாம்பு அவர் கழுத்தை நெறிக்க தொடங்கியது. இதனை கண்ட பலர் அங்கிருந்து ஓடினர். பின்னர் மற்ற வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

அந்த வனத்துறை அதிகாரி பாம்புடன் மாட்டிக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News