செய்திகள்

ரூ.10.86 கோடி வெளிநாட்டு பணத்துடன் ஆப்கானிஸ்தான் நபர் சிக்கினார்

Published On 2018-06-13 12:36 GMT   |   Update On 2018-06-13 12:36 GMT
துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ஆப்கானிஸ்தான் நாட்டு ஆசாமியிடம் இருந்து 10.81 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
திருவனந்தபுரம்:

துபாயில் இருந்து கேரளவின் கொச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் இறங்கி வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் ரியால் என வெளிநாட்டு பண நோட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

அவரிடம் இருந்த சுமார் 10.61 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பண நோட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறையினர் கூறுகையில்,  இந்த நிதியாண்டில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக சுமார் 254 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். இதில் சுமார் 87 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம்  என தெரிவித்துள்ளனர். #KochiAirport #AfghanNational #ForeignCurrency
Tags:    

Similar News