அமெரிக்காவில் சோகம்: கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கார் விபத்து ஏற்பட்டது.இதில் 2 பெண் உள்பட இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் சோகம்: கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com