செய்திகள்

லூதியானா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தீயணைப்பு பணியில் 100 வாகனங்கள்

Published On 2018-04-27 07:17 GMT   |   Update On 2018-04-27 07:17 GMT
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. #punjab #ludhianafireaccident
லூதியானா:

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் பகதூர் கே சாலையில் உள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 7 வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆடைகள் கொழுந்துவிட்டு எரிந்தால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு மூன்று முறை தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்தும் பலன் இல்லை.

இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மூலம் விடிய விடிய தீயணைப்பு பணி நடைபெற்றது. இருப்பினும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை.  தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டபோது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.#punjab #ludhianafireaccident
Tags:    

Similar News