செய்திகள்

ஏணி மீது அமர்ந்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி பாதுகாப்பு படை வீரர்கள் உலக சாதனை

Published On 2018-04-26 09:35 GMT   |   Update On 2018-04-26 10:48 GMT
இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் ஏணி மீது அமர்ந்தபடி 10 மணி நேரத்திற்கு மேலாக மோட்டார் சைக்கிள் ஓட்டி புதிய உலக சாதனைப் படைத்துள்ளனர். #BSFjawan #limcabook
புதுடெல்லி:

இந்திய எல்லைப்பாதுகாப்பு படையில் ஜான்பஸ் என மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் நிகழ்த்துவதற்கு என தனி குழு உள்ளது. இந்தக் குழு மோட்டார் சைக்கிளில் பல சாகசங்கள் புரிந்து வருகின்றன.



கடந்த 13-ம் தேதி 36 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் 1 கி.மீ. தூரத்தை 55 நிமிடங்களில் கடந்து சாதனைப்படைத்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில், இரண்டு வீரர்கள் ஏணி மீது அமர்ந்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி உலக சாதனைப் படைத்துள்ளனர்.



அவர்கள் 16.5 அடி உயர ஏணியை ராயல் என்பீல்ட் புல்லட் மோட்டர் சைக்கிளிலின் கைப்பிடியில் பொறுத்து அதன்மீது அமர்ந்து வாகனத்தை ஓட்டினர். 10 மணி நேரம் 34 நிமிடங்கள் வாகனம் ஓட்டி புதிய உலக சாதனைப் படைத்துள்ளனர். இது லிம்கா புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகியுள்ளது. #BSFjawan #limcabook

Tags:    

Similar News