செய்திகள்

இந்தி பட அதிபர் மகேஷ்பட்டை கொல்ல முயன்ற 10 பேருக்கு 5 ஆண்டு ஜெயில்

Published On 2018-04-26 07:42 GMT   |   Update On 2018-04-26 07:42 GMT
பிரபல இந்தி பட அதிபர் மகேஷ்பட்டை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. #MaheshBhatt
மும்பை:

பிரபல இந்தி பட அதிபர் மகேஷ்பட். பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய புகழ் பெற்ற டைரக்டர் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு மகேஷ் பட்டை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ரவுடி ரவிபூஜாரி துண்டுதலால் அவரை கொல்ல சதி செய்ததாக 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தி பட உலகில் தீவிரவாதத்தை பரப்புவதாகவும், வெளி நாட்டு பட வினியோக உரிமை வழங்க மறுத்ததாகவும் கூறி இந்த கொலை சதி சம்பவம் நடந்தது.

இந்த வழக்கில் ரவி பூஜாரி உள்பட 3 பேர் தலைமறைவானார்கள். இது தொடர்பாக வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மகேஷ்பட்டை கொல்ல சதி செய்ததாக ரவுடி ரவிபூஜாரி கும்பலைச் சேர்ந்த 10 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இஸ்ரத்ஷேக், முகமது ஹசந்த்கான், ஆசிம்கான், அஷ்பேக், ஆசிப்கான், ஷாநவாஸ்ஷேக், பைரோஸ், சபீர், ரகீம்கான், அனீஸ் மெர்ச்சண்ட் ஆகிய 10 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. ரவிகேஷ்சிங், யூசுப் காதாரி ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். #filmmaker #MaheshBhatt
Tags:    

Similar News