செய்திகள்

நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்

Published On 2018-04-26 04:50 GMT   |   Update On 2018-04-26 04:50 GMT
உச்சநீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #supremecourt #indumalhotra
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், இந்து மல்ஹோத்ராவை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2007-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து மல்ஹோத்ரா இன்னும் சில நாட்களில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #supremecourt #indumalhotra

Tags:    

Similar News