செய்திகள்

கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிறுவன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Published On 2018-04-25 09:53 GMT   |   Update On 2018-04-25 09:53 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிறுவன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவன் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.. #Kathua
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கத்துவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் மீது சிறார் சட்டங்களின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த விசாரணை தனியாக தொடங்கியுள்ளது. இதற்காக இன்று கைது செய்யப்பட்ட சிறுவன் கத்துவா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.

அவன் மீதான குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிக்கையின் நகலை குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு வழங்கவும், அதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

வரும் 7-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி அதுவரை சிறுவனை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். முன்னதாக சிறுவன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை நேற்று கோர்ட் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. #Kathua 
Tags:    

Similar News