செய்திகள்

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது- தேர்தல் ஆணையம்

Published On 2018-04-25 07:00 GMT   |   Update On 2018-04-25 07:00 GMT
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #KarnatakaElections2018 #KarnatakaADMK #DoubleLeafSymbol
புதுடெல்லி:

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காந்தி நகர், ஹனூர், கோலார் தங்கவயல் (தனி) ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. எம்.பி.யுவராஜ் (காந்தி நகர்), ஆர்.பி.விஷ்ணுகுமார் (ஹனூர்) மற்றும் மு. அன்பு (கோலார் தங்கவயல்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வுக்கு கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் கட்சி மனு அளித்திருந்தது. ஆனால், அ.தி.மு.க.வின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.



தமிழகம், புதுச்சேரியில் மட்டுமே அ.தி.மு.க. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்றும், கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #KarnatakaElections2018 #KarnatakaADMK #DoubleLeafSymbol
Tags:    

Similar News