செய்திகள்

காங்கிரஸ் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது - சல்மான் குர்ஷித் சர்ச்சை பேச்சு

Published On 2018-04-24 22:02 GMT   |   Update On 2018-04-24 22:02 GMT
ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் கட்சியின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Salmankurshind
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். அப்போது பல்கலைக்கழக முன்னாள் மாணவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், காங்கிரசின் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது என தெரிவித்தார்.

இதுதொடர்பாக அந்த மாணவர் கூறுகையில், கடந்த 1948-ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்தது. கடந்த 1950-ம் ஆண்டுக்குப் பின் நடந்த ஹசன்புரா, மலியானா, முசாபர்பூர் ஆகிய கலவரங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தவை. பாபர் மசூதி இடிபட்டபோதும் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. காங்கிரசின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்றார். 

இதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித், இந்தக் கேள்வி அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சி மீது சுமத்தும் குற்றச்சாட்டில் எனக்கும் பங்கிருக்கிறது. நீங்கள் கூறும் வார்த்தைகளை நான் ஏற்கிறேன். காங்கிரசின் கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சு கடும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. #Salmankurshind #Tamilnews
Tags:    

Similar News