செய்திகள்

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் குறைப்பு

Published On 2018-04-23 12:28 GMT   |   Update On 2018-04-23 12:28 GMT
போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் இந்த கல்வி ஆண்டு முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் பொறியியல் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில்நுட்ப கழகம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:

இந்தியா முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற பி.இ., பி.டெக் மற்றும் எம்.,இ., எம்.டெக் படித்த மாணவ-மாணவிகள் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்.

இதனால் பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவ- மாணவிகளிடம் குறைந்து கொண்டே வருகிறது. அதிக வேலை வாய்ப்பை பெற்று தரும் பொறியியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நடைபெறுகிறது.

சில பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மட்டுமே மாணவ- மாணவிகள் சேருகிறார்கள். இதனால் இந்த கல்வி ஆண்டு முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் பொறியியல் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில்நுட்ப கழகம் முடிவு செய்துள்ளது.
Tags:    

Similar News