search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் கல்லூரி"

    • பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.
    • பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் கோவில்பாளையம் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு எங்களது கல்லூரியில் சிங்காநல்லூரை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பணியில் சேர்ந்தார். அவர் தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் நடந்து வருகிறார். மேலும் அவர் கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியைகளின் செல்போன் எண்களை அவர்களுக்கு தெரியாமல் பெற்று இரவு நேரங்களில் ஆபாச குறுந்தகவல் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.

    இதேபோல பேராசிரியர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களையும் வாங்கி அவர்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச தகவல் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.

    இதனால் பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் என்னிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். நான் அவரை நேரில் அழைத்து கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதல்வர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வரும் பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.
    • ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் தருவைக்குளம் எப்.எக்ஸ். தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ், காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகள் குரு பிரியா (வயது 17). இவர் புளியங்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்கொலை

    சம்பவத்தன்று குரு பிரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குரு பிரியா அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அங்கு தனியறைக்கு சென்று கதவை பூட்டி கொண்ட குரு பிரியா வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது சேலையில் குருபிரியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    விசாரணை

    தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
    • பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் அமைப்பு மற்றும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து கல்லூரி நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை நடத்தியது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நாகநாதன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் செய்திருந்தனர். அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி அவரது 10 கட்டளைகளை கடைபிடிப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    • 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது.
    • மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

    சென்னை :

    தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது.

    இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு சுற்று கலந்தாய்விலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், ஒதுக்கீடு செய்தல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், கல்லூரிகளில் சேருதல், காத்திருத்தல் என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    அதன்படி, ஒரு சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு, 2 வாரங்கள் வரை ஆகிறது. முதல் சுற்று கலந்தாய்வை பொறுத்தவரையில் கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்கள் விருப்ப இடங்களில் சேர்ந்தனர்.

    அதன் தொடர்ச்சியாக 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. இதில் 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, இதில் 18 ஆயிரத்து 521 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்.

    அவர்களில் 13 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அடிப்படையிலான 2-வது சுற்று கலந்தாய்வில், 1,426 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்த நிலையில், 1,207 பேர் உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

    ஆக மொத்தம் 2-வது சுற்று கலந்தாய்வில், 14 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகள் கல்லூரிகள் சேர்ந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்து 543 பேர் இடங்களை உறுதி செய்து, முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த 2 சுற்றுகள் கலந்தாய்வு முடிவில், மொத்தம் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து, என்ஜினீயரிங் 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் நாளை (சனிக்கிழமை) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தெரிவித்தார். #PlasticBan
    சென்னை:

    சுற்றுச்சூழல் கருதி தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்யப்பட உள்ளதாக அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா நேற்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அண்ணாபல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்ப உள்ளது.

    இதேபோன்று பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். #PlasticBan
    ×