ரத்த தான முகாம்

செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ரத்த தான முகாம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் அமைப்பு மற்றும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து கல்லூரி நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை நடத்தியது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நாகநாதன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் செய்திருந்தனர். அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி அவரது 10 கட்டளைகளை கடைபிடிப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com