என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஹேண்ட் பால் போட்டியில் பதக்கம் வென்ற ரோகிணி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
- தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.
- ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் தருவைக்குளம் எப்.எக்ஸ். தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ், காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






