என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகள் குரு பிரியா (வயது 17). இவர் புளியங்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்கொலை

சம்பவத்தன்று குரு பிரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குரு பிரியா அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

அங்கு தனியறைக்கு சென்று கதவை பூட்டி கொண்ட குரு பிரியா வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது சேலையில் குருபிரியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

விசாரணை

தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குரு பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com