செய்திகள்

ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம்

Published On 2018-04-23 07:52 GMT   |   Update On 2018-04-23 07:52 GMT
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தினமான நேற்று மட்டும் நாடு முழுவதும் 10 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 4 சம்பவம் நிகழ்ந்துள்ளது. உன்னாவ், ராம்பூர், அம்ரோகா, முஷாபர்நகர் ஆகிய பகுதிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் கட்டாக் மற்றும் கேந்த்புரா பகுதியில் 2 சிறுமிகளும், ஆந்திர மாநிலம் நெல்வாயில் ஒரு சிறுமியும், அரியானவில் 14 வயது சிறுமியும், பலாத்காரம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டிலும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். #DeathForChildRapists #POCSO #TamilNews
Tags:    

Similar News