செய்திகள்

நரேந்திர மோடி ஆப் மூலம் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Published On 2018-04-22 12:38 GMT   |   Update On 2018-04-22 12:38 GMT
நரேந்திர மோடி ஆப் மூலம் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் இன்று கலந்துரையாடிய பிரதமர் மோடி ஊடகங்களை பழிகூற வேண்டாம் என கேட்டுக்கொண்டார். #NarendraModiApp
புதுடெல்லி:

நரேந்திர மோடி ஆப் மூலம் மக்கள் தெரிவித்துவரும் குறைகளில் சிலவற்றை பிரதமர் அலுவலக அதிகாரிகள் கவனித்து தீர்வுகாண ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நரேந்திர மோடி ஆப் மூலம் இன்று பிரதமர் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் கலந்துரையாடினார். அம்பேத்கர் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடிய பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்களுக்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநில பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றிபெற வைத்த தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நவீனகால தகவல் தொழில்நுட்பத்துடன் தங்கள் தொகுதி மக்களுடன் சமூகவலைத்தளங்களின் மூலமாக தொடர்புகொண்டு அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை களைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த கலந்துரையாடலின்போது சில எம்.பி., எம்.எல்.ஏக்களை பாராட்டியதுடன் சிலரது கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பிரதமர் பதில் அளித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது சமூகப்பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் எனவும் அறிவுறுத்திய பிரதமர் மோடி, சில வேளைகளில் பா.ஜ.க. தொண்டர்கள் ஊடகங்களை தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். ஆனால், நாம்தான் செய்திகள் மூலமாக ஊடகங்களுக்கு தீனி போடுகிறோம். இதற்காக ஊடகங்கள்மீது பழிபோட கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். #NarendraModiApp #BJP #Modi
Tags:    

Similar News