செய்திகள்

குஜராத்தில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம்

Published On 2018-04-21 13:00 GMT   |   Update On 2018-04-21 13:00 GMT
குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் இன்று மாலை 4.56 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 3.7 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெடியாபாடா, சக்பாரா, ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.#tamilnews
Tags:    

Similar News