செய்திகள்

லோக்பால் உறுப்பினர்களை நியமிக்க விரைவில் நடுவர் குழு - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Published On 2018-04-17 10:19 GMT   |   Update On 2018-04-17 10:30 GMT
லோக்பால் உறுப்பினர்களை நியமிக்க விரைவில் நடுவர் குழு அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #Centralgovernment

புதுடெல்லி:

ஊழல் கண்காணிப்பு அமைப்பான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் ‘லோக்பால்’ என்றும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்றும் அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு லோக்பால் அமைப்புக்கு இன்னும் உறுப்பினர்களை தேர்வு செய்யாமல் உள்ளது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் ஆஜரானார்.

அப்போது, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. லோக்பால் உறுப்பினர்களை நியமிக்க விரைவில் நடுவர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கூடிய விரைவில் லோக்பால் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்கை வருகிற மே 15-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். #Centralgovernment

Tags:    

Similar News