செய்திகள்

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி

Published On 2018-04-17 05:39 GMT   |   Update On 2018-04-17 05:39 GMT
ஐதராபாத், போபால் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள ஏ.டி.எம்.கள் ரூபாய் நோட்டுகள் இன்றி காலியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

ஐதராபாத், போபால், வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் வெளியானது. ரூபாய் நோட்டுகள் இல்லாமல் ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடும் அவதியடைந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

போபால் நகரங்களில் உள்ள வங்கிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரூபாய் நோட்டுகள் அளிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். ஏ.டி.எம் குறித்த புகாரையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாரணாசி, ஐதராபாத் நகரங்களில் கடந்த பல நாட்களாக இதே நிலை நீடிப்பதாக பலர் புகாரளித்துள்ளனர்.



இதற்கிடையே, போதிய ரூபாய் நோட்டு இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய நிதித்துறை இணை மந்திரி எஸ்.பி. சுக்லா, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் பிரச்சனை சரிசெய்யப்படும் என அவர் தெரிவித்தார். #TamilNews
Tags:    

Similar News