செய்திகள்
கோப்புப்படம்

டென்மார்க் பெண் கற்பழிப்பு - 5 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியது டெல்லி கோர்ட்

Published On 2018-04-16 10:32 GMT   |   Update On 2018-04-16 10:32 GMT
இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் ஐந்து குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக டெல்லி வந்தார்.

14-1-2014 அன்றிரவு அவர் ரெயில் நிலையம் அருகே உள்ள டிவிசன் ரெயில்வே ஆபிசர்ஸ் அறை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல் டென்மார்க் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கடத்தி சென்று கற்பழித்தது. மேலும் அவரிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். இதில் 3 பேர் சிறார் என்பதால் அவர்களின் விசாரணை மட்டும் சிறார் நீதிமன்ற வாரியத்துக்கு மாற்றப்பட்டது.

டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இந்த கற்பழிப்பு வழக்கு விசாரணை நடந்தது. 27 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே குற்றம் சாட்டப்பட்ட ஷியாம் லால் என்பவர் மரணம் அடைந்தார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த  மகேந்திரா என்கிற கஞ்சா (27), முகமது ராஜா (23), ராஜூ(24), அர்ஜூன் (22), ராஜி சக்கா (23) ஆகியோர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் ஆனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 10-6-2016 அன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகளின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ். மேத்தா ஆகியோரை கொண்ட அமர்வு, முன்னர் கீழ்கோர்ட்டில் குற்றவாளிகளின் மரபணுவை ஆதாரமாக சமர்ப்பித்திருந்ததை சுட்டிக்காட்டி, இதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News