search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி உயர்நீதிமன்றம்"

    • உபி.யில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக புகார்
    • மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பிரதமர் மோடி பேசியதாக புகார்

    பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாகவும், அவரின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பேசினார்.

    ஆகவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரசாரத்திற்கு அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் அந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

    டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அவர் திகார் சிறையில் உள்ளார்.

    பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்ததோடு அந்த மனுவை தள்ளுபடி செய்து.

    ஆனால் மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்தது. இதற்கிடையே தொடர்ந்து கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் கோபம் அடைந்த டெல்லி உயர்நீதிமன்றம், "இந்த விசயத்தில் நாங்கள் ஒருமுறை உத்தரவு பிறப்பித்துவிட்டோம். அதன்பிறகு தொடர்ந்து வழக்கு தொடரக்கூடாது. அடுத்தடுத்த தொடர்ச்சிகள் இருப்பதற்கு இது ஒன்றும் ஜேம்ஸ் பாண்டு படம் அல்ல" என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வழக்கு, ஜாமின் மனு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
    • தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "முதல்வரின் கைது மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்பாடுக்கு எதிரானது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை நியாயம் அல்ல" என குறிப்பிட்டார்.

    அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "டெல்லி முதல்வர் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை. போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

    தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது" என வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடால் ஓத்திவைத்தார்.

    • திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது
    • தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விசிகவுக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிடுகிறார் திருமாவளவன். விழுப்புரம் மக்களவை தொகுதியில் விசிக சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்

    • கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்," நாளை டெல்லி சென்று மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.
    • டெல்லி உயர்நீதிமன்றம் சம்மனுக்கு எதிராக தடைவிதிக்க மறுத்துவிட்டது.

    டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    தனக்கு சம்மன் அனுப்பியது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 7-வது மற்றும் 8-வது முறையாக சம்மன் அனுப்பியபோது நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இதற்கிடையே 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.

    அதில் விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டாம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்படும். அதற்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.

    ஒன்பது சம்மனுக்கும் எதிராக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வக்கீல் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜரானால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றார்.

    இருந்தபோதிலும், சம்மன் அனுப்பியதற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் கேட்டுக்கொண்டதுடன் வழக்கை ஏப்ரல் 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. அதனைத் தொடர்ந்துதான் கெஜ்ரிவால் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    • மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

    மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தொடர்ந்து நாட்டிற்கு எதிரான எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் பரப்பி தவறாக வழிநடத்தி வருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "இந்திய வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். தங்களை யார் சரியாக வழி நடத்துகிறார்கள்? தவறாக வழி நடத்துகிறார்கள்? என்று அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்" என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    • அபராத தொகையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க வலியுறுத்தல்.
    • மேற்கு மண்டலத்தில் மட்டும் 380 பேருக்கு டெங்கு காய்ச்சல்.

    கொசுக்களால் பரவும் நோய்கள் கணிசமான அளவில் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இதுதொடர்பான விசாரணையின் போது கடந்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் ஏன் அதிகரித்தது என்பதை விளக்கும் அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொசு பரவலுக்கு காரணமாக இருப்போருக்கு அபராத தொகையை ரூ. 500-இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கவும் வலியுறுத்தி உள்ளது.

    வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராஜத் அனேஜா, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டெங்கு காய்ச்சல் பரவல் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு மண்டலத்தில் மட்டும் 380 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரங்களை மாநகராட்சி வழங்குவதில்லை என்று தெரிவித்தார்.

    "இரண்டு வாரங்களில் அனைத்து விவரங்களும் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த அறிக்கையில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்ததற்கான காரணங்களை விளக்கமாக குறிப்பிட வேண்டும்," என்று நீதிபதி மன்மீட் பி.எஸ். அரோரா அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. 

    • மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
    • மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்யுமாறு அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யாக இருந்த மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை 2023 நவம்பர் 9 அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

    இப்பரிந்துரையை ஏற்ற மக்களவை, மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

    எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசு எஸ்டேட் இயக்குனரகம் கேட்டுக்கொண்டது.

    மஹூவா மொய்த்ரா, தனது பங்களாவை காலி செய்யாத நிலையில், இது குறித்து மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால், அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், "விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில சிறப்புக் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு 6 மாதங்களுக்கு பங்களாவில் உறுப்பினர்கள் தங்க, விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் மஹுவாவின் கோரிக்கை மீது எஸ்டேட் இயக்குனரகம் சொந்தமாக முடிவு எடுக்கலாம். குடியிருப்பவர்களை காலி செய்ய கூறும் முன்பு, அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது. இவ்விவகாரத்தில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    மேலும் தனது மனுவை திரும்பப் பெற மஹுவாவிற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

    டெல்லியின் மேம்பாட்டு பணிக்காக சில பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 4 வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #delhihighcourt #NBCC
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள சரோஜினி நகர், நரோஜி நகர், நேதாஜி நகர், தியாகராஜ நகர்,மொகமத்பூர் மற்றும் கஸ்தூர்பா நகர்  ஆகிய ஆறு காலனி பகுதிகளை மேம்படுத்த உள்ளதாக தேசிய கட்டிட கட்டுமான கழகம் அறிவித்திருந்தது. அதற்காக 20 ஆயிரம் மரங்கள் வெட்டபடும் என குறிப்பிட்டனர். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

    இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மரங்களை வெட்ட கூடாது என பலர் போராட்டம் நடத்தினர். அரசின் திட்டத்தினை எதிர்த்து  மருத்துவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த விசாரணை வரும் வரை அதாவது ஜூலை 4 வரை மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து வெளியிட்ட தீர்ப்பில், மரங்களை வெட்ட பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதா?. மேலும், வீடுகள் கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என தேசிய கட்டிட கட்டுமான கழகத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


    இந்த திட்டத்தை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து போராட்டம் நடத்தினர். வெட்டப்படும் மரங்களுக்கு சமமாக மரக்கன்றுகளை நடுவோம் என்ற அரசின் பதிலையும் அவர்கள் ஏற்கவில்லை. ஒரு வளர்ச்சியடைந்த மரத்திற்கு பதிலாக ஒரு செடியை தருவது எவ்வாறு ஈடாகும் என மக்கள் கேள்வி எழுப்பினர். #delhihighcourt #NBCC

    ×