பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் சர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் - மத்திய அரசு ஒப்புதல்

இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர்.யஸ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் சர்மா அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் - மத்திய அரசு ஒப்புதல்
Published on

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர். இந்நிலையில் கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், குடியரசுத் தலைவர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே யஷ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஏற்கனேவே உள்ளக விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுவது அல்லது இந்த விஷயத்தை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைப்பது உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com