செய்திகள்

தெலுங்கானாவின் மணல் கொள்கை நாட்டின் மிகச்சிறந்த கொள்கையாகும் - பஞ்சாப் மந்திரி பாராட்டு

Published On 2018-04-13 13:56 GMT   |   Update On 2018-04-13 13:56 GMT
தெலுங்கானாவின் மணல் கொள்கை நாட்டின் மிகச்சிறந்த கொள்கை, அதிலிருந்து சில அம்சங்களை எங்கள் மாநிலத்திலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். #NavjotSinghSidhu #Telangana #Sandminingpolicy

ஐதராபாத்:

பஞ்சாப் மாநில சுற்றுலா மற்றும் உள்துறை மந்திரி நவ்ஜோத் சிங் சித்து தெலுங்கானா மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். வேவ்வேறு மாநிலங்களில் பின்பற்றப்பட்டுவரும் மணல் கொள்கைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும் பணி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானா மாநிலத்தில் பின்பற்றப்பட்டுவரும் மணல் கொள்கை நாட்டின் மிகச்சிறந்த கொள்கையாகும், அதிலிருந்து சில அம்சங்களை எங்கள் மாநிலத்திலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒன்று அல்லது இரண்டு நதிகள் உள்ள தெலுங்கானாவில் அதிக வருமானம் ஈட்டப்படுகிறது, பஞ்சாப்பில் நான்கு நதிகளின் மூலம் அந்த வருவாயை ஈட்டமுடியவில்லை. நான் தெலுங்கானா அரசை குற்றம் கூறவில்லை, அவர்களது கொள்கை மிகச்சிறந்ததாகும். இவ்வாறு அவர் பேசினார். #NavjotSinghSidhu #Telangana #Sandminingpolicy
Tags:    

Similar News