செய்திகள்

ஜாமினுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு - கார்த்தி சிதம்பரம் ஆடிட்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Published On 2018-04-10 07:27 GMT   |   Update On 2018-04-10 07:27 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. #KartiChidambaram
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாக கூறி கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதே வழக்கில், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

14 நாட்கள் விசாரணைக்காவலில் இருந்த அவர் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது. இதே வழக்கில் சி.பி.ஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் டெல்லி ஐகோர்ட்டை நாடி முன்ஜாமின் பெற்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட், இது தொடர்பாக பாஸ்கர ராமன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தனர். #KartiChidambaram  #INXMediaCase #TamilNews
Tags:    

Similar News