செய்திகள்

ரூ.950 கோடி பழைய நோட்டுகளை மாற்றித்தர இந்தியாவிடம் நேபாள பிரதமர் கோரிக்கை

Published On 2018-04-05 07:52 GMT   |   Update On 2018-04-05 07:52 GMT
இந்தியாவின் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் அதன்மூலம் கிடைத்த ரூ.950 கோடிக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும்படி நேபாள நாட்டு பிரதமர் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். #Demonetisation #Nepal
புதுடெல்லி:

இந்தியாவின் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் அதன்மூலம் கிடைத்த ரூ.950 கோடிக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும்படி நேபாள நாட்டு பிரதமர் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். பழைய செல்லாத நோட்டுகளை வங்கிகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மக்களுக்கு அவதி ஏற்பட்டது.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம், பூடான் போன்ற அண்டை நாடுகளிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் செல்லாத இந்திய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில் நேபாளத்தில் மட்டும் ரூ.950 கோடிக்கு செல்லாத நோட்டுகள் மாற்றம் நடந்தது. அதன் பிறகு அந்த பழைய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நேபாள அரசின் வசம் உள்ளன.



ரூ.500, ரூ.1000 பழைய ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றிக் கொள்வது என்று இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே இதுவரை எந்த பேச்சும் நடைபெறவில்லை. இதனால் 1½ ஆண்டுகள் கழிந்த நிலையில் ரூ.950 கோடியை என்ன செய்வது என்று நேபாள அரசு கையை பிசைந்தபடி உள்ளது.

நேபாள பிரதமர் சர்மா பல தடவை இந்திய அரசை தொடர்பு கொண்டு இந்த ரூ.950 கோடியை மாற்றி தரும்படி கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இந்த வாரம் நேபாள பிரதமர் சர்மா இந்தியா வர உள்ளார். அப்போது அவர் ரூ.950 கோடி இந்திய செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளை வழங்கும்படி கோரிக்கை விடுக்க உள்ளார். #Demonetisation #Nepal
Tags:    

Similar News