செய்திகள்

இந்திய அளவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம்

Published On 2018-04-03 11:02 GMT   |   Update On 2018-04-03 11:02 GMT
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐ.ஐ.டி முதலிடமும், மும்பை மற்றும் டெல்லி ஐ.ஐ.டி அடுத்தடுத்த இடங்களும் பிடித்துள்ளன. #NIRF2018
புதுடெல்லி:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி இரண்டாமிடமும், டெல்லி ஐ.ஐ.டி மூன்றாமிடமும் பிடித்துள்ளன.

மேலாண்மை நிறுவனங்களை பொறுத்தவரை அகமதாபாத் ஐ.ஐ.எம் முதலிடமும், பெங்களூர் ஐ.ஐ.எம் இரண்டாமிடமும், கல்கத்தா ஐ.ஐ.எம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன. பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் முதலிடமும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை இரண்டாமிடமும், பணாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாமிடமும் பிடித்துள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி மற்றும் பெங்களூர் தேசிய சட்டபள்ளி ஆகியவை அந்தந்த பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளன. #NIRF2018
Tags:    

Similar News