செய்திகள்

உ.பி.யில் மேலும் ஒரு அம்பேத்கர் சிலை உடைப்பு - மர்ம நபர்களை தேடுகிறது போலீஸ்

Published On 2018-03-31 05:04 GMT   |   Update On 2018-03-31 05:04 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அலகாபாத்:

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம் திரிவேணிபுரம் ஜுன்சியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். சிலையின் தலைப்பகுதியை உடைத்து துண்டாக்கியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். சிலையை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.



அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரின் மத்தியில் ராம்ஜி என்று சேர்க்க யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் இடதுசாரியிடம் இருந்து பாஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஆங்காங்கே சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உ.பி.யில் இதற்கு முன்பு அலிகார், மீரட் உள்ளிட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. தமிழகத்தில் பெரியார் சிலை, கேரளாவில் காத்தி சிலை, உ.பி.யின் கருவாவ் கிராமத்தில் இந்து கடவுள் அனுமன் சிலை சேதப்படுத்தப்பட்டது.

சிலைகளை உடைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News