செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்துக்கு ஏப்ரல் 7-ம் தேதி வரை கெடு விதித்த மத்திய அரசு

Published On 2018-03-28 23:14 GMT   |   Update On 2018-03-28 23:14 GMT
தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #FacebookDataLeak #CambridgeAnaytica
புதுடெல்லி:

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது.

இந்த தகவல் திருட்டு சர்ச்சையில் சிக்கி கொண்ட பேஸ்புக், பங்குகளின் வீழ்ச்சி காரணமாக பல ஆயிரம் கோடி டாலர்களை இழந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தகவல்திருட்டு நடந்ததை ஒப்புக்கொண்ட பேஸ்புக் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டதோடு, இனிமேல் இதுபோன்ற நிகழ்வு இருக்காது என்றும் உறுதியளித்தது.

இருப்பினும் பேஸ்புக்கில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் இது என்று பல முக்கிய பிரமுகர்கள் கூறி வருவதோடு ஒருசிலர் பேஸ்புக்கின் கணக்கையும் முடித்து கொண்டனர். இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் பேஸ்புக் தகவல் திருட்டில் ஈடுபடவுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதிக்குள் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையிலான விளக்கம் வரவில்லை எனில் பேஸ்புக்கை இந்தியாவில் தடைசெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #FacebookDataLeak #CambridgeAnaytica #tamilnews
Tags:    

Similar News