செய்திகள்

ரூ.445 கோடி கடன் மோசடி- ஐ.டி.பி.ஐ. வங்கியின் பொது மேலாளர் மீது வழக்கு

Published On 2018-03-24 09:35 GMT   |   Update On 2018-03-24 09:35 GMT
ஐ.டி.பி.ஐ. வங்கியின் ரூ.445 கோடி கடன் மோசடி தொடர்பாக பொது மேலாளர் உள்பட 31 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. #CBIinquiry

புதுடெல்லி:

ஐதராபாத்தில் உள்ள ஐ.டி.பி.ஐ.யின் பஷீராபாத் கிளையில் 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கிசான் கிரிடிட் கார்டுகளுக்கும் மீன் பண்ணைகள் அமைக்கவும் கடன் வழங்கப்பட்டது.

இதில் போலி ஆவணங்கள் தயாரித்து முறை கேடாக கடன் பெற்று மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தாததுடன் அந்தப் பணத்தை வேறு தேவைகளுக்கு பயன் படுத்தி இருந்தனர். இந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.445.32 கோடியாக உயர்ந்தது.

இது தொடர்பாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. இந்த ரூ.445 கோடி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத் தியது.

இதில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐ.டி.பி.ஐ. வங்கியின் பஷீராபாத் கிளை பொது மேலாளர் பட்டு ராமராவ் உள்பட 31 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.ஐ. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #CBIinquiry  #tamilnews

Tags:    

Similar News