செய்திகள்

பேஸ்புக் தகவல்கள் திருட்டு- கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Published On 2018-03-23 16:10 GMT   |   Update On 2018-03-23 16:10 GMT
பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்கும்படி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #CambridgeAnalytica #centralgovernment
புதுடெல்லி:

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக்கொள்ளாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இந்தியர்களின் தரவுகளை கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியதா? என்பது குறித்து மார்ச் 31-க்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்திய இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் குறித்த விபரங்களை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியர்களின் தரவுகளை வைத்துக்கொள்ளும் முறை மற்றும் பயனர்களின் சம்மதம் பெறப்பட்டதா? என்பதற்கும் விளக்கம் கேட்டுள்ளது. #tamilnews  #CambridgeAnalytica #centralgovernment
Tags:    

Similar News