செய்திகள்

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் அரசு ஊழியர்களை உடனே கைது செய்ய தடை

Published On 2018-03-20 20:55 GMT   |   Update On 2018-03-20 20:55 GMT
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆங்காங்கே தவறாக பயன்படுத்தப்படுகிறது. இப்படி அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசு ஊழியர்கள்மீது வழக்கு பதிந்து, உடனடியாக கைது செய்வதை சுப்ரீம் கோர்ட்டு நேற்று கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இது தொடர்பான ஒரு வழக்கை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு. லலித் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணை முடிவில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்வதற்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்குகளில் அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன் உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டி பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு இந்த வழக்குகளில் முன் ஜாமீன் வழங்குவதற்கு முழுமையான தடை இல்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். 
Tags:    

Similar News