செய்திகள்

சீட்டு மோசடியை தடுக்க புதிய சட்ட மசோதா - நாடாளுமன்றத்தில் அறிமுகம்

Published On 2018-03-20 19:46 GMT   |   Update On 2018-03-20 19:46 GMT
முறையற்ற விதத்தில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபடுவதை தடுக்க நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் சீட்டு நடத்தி மோசடி செய்தல், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி முறையற்ற விதத்தில் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டுகளை திரட்டி விட்டு ஓடி விடுதல் போன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன.

இப்படி முறையற்ற விதத்தில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபடுவதை தடுக்கிற விதத்தில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒரு சட்ட மசோதாவை தயாரித்து உள்ளது.

கட்டுப்பாடற்ற டெபாசிட்டுகளை தடை செய்யும் மசோதா என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த மசோதாவை, நாடாளுமன்ற மக்களவையில் பல்வேறு கட்சியினரின் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சிவபிரதாப் சுக்லா நேற்று அறிமுகம் செய்தார்.

மக்களிடம் இருந்து சட்ட விரோதமான டெபாசிட்டுகளை பெறுகிற நடவடிக்கைகளை ஒடுக்குவதே இந்த மசோதாவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  #tamilnews 
Tags:    

Similar News